(Guest blog by Geeta Ilangovan)
ஆஃப்கானிஸ்தான் விமானநிலையத்தில் இறங்கியபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான் செல்ல வேண்டிய நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டிய நபரைக் காணவில்லை. அவரின் தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டுமென்றால் விமானநிலையத்திற்கு வெளியே உள்ள பூத்திற்கு போக வேண்டும். தீவிரவாதமும், பெண் ஒடுக்குமுறை கொடுமைகளும் தலைவிரித்தாடும் மண்ணில் தனியே காலெடுத்து வைக்க தைரியம் வரவில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. பயத்தை மறைத்துக் கொண்டு விமான நிலையத்தின் உட்புறம் அலைந்து கொண்டிருந்தேன்.
என்னை கவனித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர், `யார் நீங்கள் ?’ என்று உடைந்த ஆங்கிலத்தில் மிரட்டலாய் கேட்டார். `இங்குள்ள பெண்களுக்கு ஐடி ட்ரெய்னிங் தர வந்திருக்கிறேன்’ என்றேன். அரைகுறையாய் புரிந்து கொண்டு, டீச்சரா என வினவ, ஆமென்றேன். வேகமாய் போய், ஒரு நாற்காலி கொண்டு வந்து அமரச் சொன்னார். எந்த நாடு என்று கேட்க இந்தியா என்ற போது, அவர் `வி லவ் இந்தியா’ என்றார் மலர்ச்சியுடன்.
வெளியே பூத்திலிருந்த போனை அங்கிருப்பவர்களின் உதவியுடன் வயர் இழுத்து விமான நிலைய வாசலுக்கு கொண்டு வந்து வைத்து என்னை பேசச் சொன்னார். அழைத்து போகும் நபர் வரும் வரை உடனிருந்து பத்திரமாக வழியனுப்பினார். நெகிழ்ந்து போய் நன்றி சொன்ன போது, `நீங்கள் எங்கள் நாட்டுப்பெண்களுக்கு கல்வி தர வந்திருக்கிறீர்கள், நாங்கள் மதிக்கும் இந்திய நாட்டுப் பெண், உங்களுக்கு உதவ வேண்டியது எங்கள் கடமை’ என்றார். பெண்களை கொடுமையாக ஒடுக்கும் நாட்டில் கூட, பெண்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டும் எளிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியே தெரியாமல் அமைதியாக உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் நம்பிக்கையுடன் தொடர்ந்து உழைக்கலாம். இதை ஆஃப்கானிஸ்தானில் தான் கற்றுக் கொண்டேன்‘ என்று உஷா விவரித்த போது அரங்கமே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது.
உஷாவைப் பற்றி ஒரு அறிமுகம். இவர் வாஷிங்டனில் வசிக்கும் கோவைப் பெண். உலகெங்கிலும் பல நாடுகளுக்கு சென்று, பின்தங்கிய நிலையிலிருக்கும் பெண்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியையும், தொழில்திறன் பயிற்சிகளையும் அளித்து வருகிறார். இதற்கென அப்ராப்ரியேட் ஐடி (Appropriate IT) என்ற நிறுவனத்தையும் வாஷிங்டனில் நடத்தி வருகிறார். கிராமப்புறங்களில் உள்ள எளிய பெண்களுக்கு உலகத்தரத்தில் தகவல்தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு பயிற்சி தந்தால் அவர்கள் தம்மையும் உயர்த்திக் கொண்டு, தான் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பார்கள் என்பது இவரின் அழுத்தமான நம்பிக்கை.
இதற்கென அப்ராப்ரியேட் ஐடி டெவலப்மென்ட் அகாடமி (அய்டா) என்ற பயிற்சி நிறுவனத்தையும் உஷா நிறுவியுள்ளார். அய்டாவின் முதல் பயிற்சி மையம் கோவை அருகிலுள்ள கிணத்துகடவு கிராமத்தில் துவக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்கவிழா சென்ற ஆகஸ்ட் 15ந் தேதி கோவையில் உள்ள என் ஜி பி பொறியியல் கல்லூரியில் முற்றிலும் புதுமையான முறையில் நடைபெற்றது. ‘நம்மை கொண்டாடுவோம், சமூக மாற்றத்திற்கு உத்வேகமூட்டுவோம்’ (Celebrating Ourselves, Inspiring Social Change) என்று பெயரிடப்பட்ட இந்த விழாவில் சமூக மாற்றத்திற்காக முனைப்புடன் உழைக்கும் இளம்பெண்கள் மூவர், தம்மளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த பெண்களை சந்தித்துப் பேசினார்கள்.
சீனாவிலிருந்து யுன் மிங்க் வாய், ஜெர்மனியில் பணியாற்றும் அமெரிக்க குடிமகள் ஹீதர் மூருடன் இந்தியாவிலிருந்து நானும், உஷாவும் கலந்து கொண்டோம். ப்ரியா தேவி, ஸ்வேதா, சுகன்யா மூவரும் எங்களுடன் கலந்துரையாடினர். அப்போது உஷா பகிர்ந்து கொண்டது தான் முதல் பத்தியில் இருப்பது.
சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னையும், தான் சார்ந்துள்ள சமுதாயத்தையும் எப்படி உயர்த்துவது என்ற கோணத்தில் சென்றது இந்த உரையாடல். இதில் பெண்களின் தனிப்பட்ட அனுபவங்களும், சமுதாயப் பிரச்சனைகளும் பிணைந்து சென்றது சுவரசியமாக இருந்தது. ப்ரியாவும், ஸ்வேதாவும், சுகன்யாவும் கேள்விகளால் எங்களை திணறடித்தனர். எங்கள் அனுபவங்களை அறியும் ஆர்வத்தையும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற இவர்கள் துடிப்பையும் வெகுவாக ரசித்தோம்.
மிங்க் சீனாவில் தேயிலைப் பொருட்களில் மக்களின் ரசனையை ஆய்வு செய்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை ஆலோசனை கூறும் நிறுவனம் நடத்தி வருகிறார். பொதுச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பிம்பத்தை முன்னிலைப்படுத்தும் உத்திகளை வடிவமைத்துத் தரும் கம்பெனியை நடத்துகிறார் ஹீதர். இவர்கள் இருவரும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். தாம் விரும்பும் துறையில் சாதிப்பதற்காக எதிர்கொண்ட சவால்களை பகிர்ந்து கொண்டனர். சக பெண்களுடன் இணைந்து சமூக மாற்றங்களுக்கு வித்திட வேண்டும் என்ற முனைப்பு இவர்கள் பேச்சில் வெளிப்பட்டது. நம் நாட்டுப் பெண்களின் வாழ்க்கை முறை குறித்தும் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
புடவையைப் பார்த்து ஒரே ஆச்சரியம் மிங்க்குக்கு. இவ்வளவு நீளமான, சிக்கலான உடையா? இதை அணிந்து கொண்டு பெண்கள் எப்படி இயல்பாக நடமாடி, அன்றாடப் பணிகளை செய்கிறார்கள் என்று வியந்தார். சீனாவில் விசேசமான விழா நாட்களில் மட்டும் தான் பெண்கள் தம் கலாச்சார உடையை அணிவார்கள், மற்றபடி தினமும் எளிமையான பேண்ட், ஷர்ட் அணிந்துதான் அன்றாட வேலைகளைச் செய்வார்கள், இந்தியாவில் கலாச்சார உடை தான் தினசரி உடையா என்று மிங்க் கேட்ட போது………… இங்குள்ள பெண்ணுடை மீதான ஒடுக்குமுறையை எண்ணி ஆதங்கப்படத்தான் முடிந்ததே ஒழிய, பதில் சொல்ல முடியவில்லை.
நம்மூர் சுடிதாரை நைஸ் ட்ரஸ் என்று சிலாகித்த ஹீதர், துப்பட்டாவைக் காட்டி, `இயல்பான பணிகளை செய்யும் போது இது தொந்தரவாக இருக்குமே, எதற்கு அணிகிறீர்கள் ?’ என்று அப்பாவியாகக் கேட்ட போதும் அசட்டு சிரிப்பை மட்டும் உதிர்த்தோம்.
உஷாவுடன் திறமையான பெண்கள் குழுவும் இணைந்து பணியாற்றுகிறது. அப்ராப்ரியேட் ஐடி, சமூகப் பணிகளுக்கான கணிணி மென்பொருளையும் உருவாக்கி, பயிற்சி அளிக்கிறது. நாட்டில் நடைபெறும் ஊழலை கண்டறிய இவர்கள் ஏற்படுத்தியுள்ள `ஜனனி’ என்ற மென்பொருளை பல நாடுகளில் தன்னார்வ அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. உகாண்டா நாட்டில் உஷா அளித்துள்ள பயிற்சி, இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தவிர, நிறுவனங்களின் தேவைக்கேற்பவும் தகவல்தொழில் நுட்ப மென்பொருளை உருவாக்கித் தருகிறார்கள். மென்பொருள் உருவாக்கத்தில் தீபாவும், பயிற்சிகளை ஒருங்கிணைப்பதில் சுபாவும் பங்களிக்கின்றனர்.
மாஸ் கம்யூனிகேசன் படித்துவிட்டு, கோவை வானொலி நிலையத்தில் பணி, பின்பு அமெரிக்காவில் நாஸா பணி என்று பயணித்த உஷாவின் பயணம் அப்ராப்ரியேட் ஐடி, அய்டா என்று முற்றிலும் புதிய பரிமாணம் கொண்டுள்ளது. பலர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து…? உலகின் கடைக்கோடி கிராமத்திலுள்ள பெண்ணுக்கும் நவீன தகவல்தொழில்நுட்பங்களை சென்று சேர்க்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன, மென்சிரிப்புடன் சொல்கிறார் உஷா. நிச்சயம் செய்வார்! வாழ்த்துக்கள் தோழி!
(This blog post is written by Geeta Ilangovan who is a Media & Communications Officer at Press Information Bureau. She is also a well-known social activist and independent film maker. The views expressed above are her own.)
Categories: appropriate it, asia, development academy, innovation lab
hello madem,i am arun from trichy, i saw about your aida in dinakaran vasantham book, i am in a big confusion and having many doubts in animation and i need to talk to yu madem my contacts email: arunvm750@yahoo.com moble no:9787791375 help me madem thank you madem.
அம்மா வனக்கம்,னான் ஒரு ஏலை குடும்ப பென்மனி நான் எம்.காம்,+டைப்ரைடிங் பொத் ஹையர் முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகலாய் டெடா எண்ட்ர்ய் ஆபரெட்ட்ராய் தனியார் துரையில் வெலை பார்த்து வருகிரென் இதில் பொதிய வருமானம் இல்லை.எனக்கு திருமனம் ஆகி இரு பில்லைகல் உல்லனர்.எனது வயது 39(பி.தெதி>07/07/1975) நான் தஙலின் கட்டுரை படித்து இந்த தகவல் அனுப்புகிரென் நான் மல்ட்டி மீடியா படித்து சாதிக்க வலிகாட்டும் படி கெட்டுக்கொல்கிரென்.னன்ரி.எனது செல்>9597501906