!..AIDA-வும் நானும்..!

(Guest blog by Priya Devi Kuzhali)

இளநிலை இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்த சமயம், மாணவிகளுக்கான இலவச பயிலரங்கத்தில் எனது பெயரையும் பதிவு செய்திருந்தார் என் துணைத்தலைவர்.

அந்த பயிலரங்கத்தைப் பற்றி மேலோட்டமாக சில செய்திகள் சேகரித்து, விடுமுறை தினத்தில் கூட கல்லூரி வர வேண்டி உள்ளதே என்ற சின்ன சலிப்போடு, கல்லூரியில் காத்துக்கொண்டிருந்தேன், அந்த பயிலரங்கை நட்த்தவிருந்த பெண்மணிக்காக.

என்னைப் போலவே கிட்ட்தட்ட இருபது மாணவிகள் (சிலர் வேறு கல்லூரிகளில் இருந்து) வந்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்மணி வந்தார். தன்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு, எங்களை அறிமுகம் செய்யச் சொன்னார்.

முதல் மூன்று நாட்கள் “Wordpress” தளத்தில் வலைப்பூ ஏற்படுத்தி, அதில் செய்தி பதிவேற்றம் செய்து பார்த்தோம். சில விளையாட்டுகள் இடையிடையே உற்சாகம் ஊட்டியது.

எங்களை குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் சமூகம் சார்ந்த தலைப்புகள் கொடுத்து, அது பற்றியதொரு வலைப்பூ உருவாக்கச் சொல்லியிருந்தார். குழந்தைத் தொழிலாளர்கள் என்பது என் குழுவின் தலைப்பு. பல தளங்களில் இதுபற்றி அலசி ஆராய்டந்து, கண்ட, கேட்ட, தகவல்களை பகிர்ந்து, சட்டங்கள் பற்றியும், அதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும் சிந்த்தித்தோம்.

வலைப்பூ தயார்..! தமிழ் மேல் நான் கொண்டிருந்த காதலினால், எங்கள் வலைப்பூ மட்டும் தமிழில் இருந்தது. இறுதி நாளில் பார்வையாளர்களுக்கு எங்கள் வலைப்பூ பற்றி விளக்க வேண்டும். சிறந்த வலைப்பூவுக்கு பரிசும் உண்டு.

சமுதாயத்தில் எழும் குழப்பங்களுக்கு, உங்களையும் என்னையும் உள்ளடக்கிய சமுதாயம் தான் விடை காண முடியும் என்ற கருத்தோடு எங்கள் படைப்பை சமர்ப்பித்தோம். இவ்வாறே, இன்னும் பல தலைப்புகளில் சக மாணவிகள் தங்கள் வலைப்பூக்களை முறையே விளக்கினர். அந்த பயிலரங்கம் என் வாழ்வின் நல்லதொரு திருப்புமுனையாய் அமைந்த்து.

இந்த பயிலரங்கில் நான் கற்றது வெறும் பாடம் அல்ல. வாழ்வைக் கொண்டாடவும், என்னை மேம்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யவும் கற்றுக்கொண்டேன். மிகச்சரியான நேரத்தில் எங்களை நல்லபடியாக செதுக்கினார் உஷா அவர்கள். சமுதாயத்தில் எங்களுடைய பங்கை எடுத்துரைத்து, எங்களுடைய ஆற்றல்களை எங்களுக்கு படம் பிடித்து காட்டினார், உஷா கொடுத்த உத்வேகம் இன்னும் உயிரோட்டமாய் என்னுள்..!

AIDA எனக்கு பல நெகிழ்ச்சியான தருணங்களைப் பரிசளித்தது. அப்படியான ஒரு தருணம் தான், 2014- ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நடந்தது. AIDA அன்று கோவையில் நிருவப்பட்ட்து.
மிங், ஹீதர், மற்றும் திருமதி கீதா இளங்கோவன் அவர்கள் சிறப்பு விருந்தினராய் எங்களோடு கைகோர்த்தனர்.

சில உணர்வுப்பூர்வமான அறிவுப் பகிர்தலோடு, உஷா, திருமதி தீபா, திருமதி சுபபிரியா, இன்னும் பலரது கடுமையான முயற்சியால், நிகழ்ச்சி செவ்வனே நிறைவு பெற்றது.

இன்று AIDA மண்ணில் வேரூன்றி பல நல்ல சேவைகள் செய்து வருகிறது. இன்னும், கிளைகளும், பூக்களும், கனிகளுமாய் AIDAவின் பயணம் தொடரும்.

“சேவைக்காக இணைந்த கரங்கள்
ஒருபோதும் – வேறு எந்த
தேவைக்காகவும் பிரிவதில்லை”

– குழலி பிரியா

(This blog post is written by Priya Devi Kuzhali, who was a student of AIDA of 2012. The views expressed above are her own)

Tags: , , , , , ,
Categories: appropriate it, asia, development academy

3 Comments

 1. Geeta says:

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ப்ரியா (y) தெளிந்த நடையும், கருத்துக்களை முன் வைக்கும் பாங்கும் நீங்கள் சொல்ல நினைப்பதை கண் முன் நிறுத்துகின்றன. கனிவான வாழ்த்துக்கள் :) தொடர்ந்து எழுதுங்கள்.

 2. Priya Devi K says:

  வாழ்த்துக்கு மிக்க நன்றி.. உங்கள் ஊக்கத்தின் உதவியோடு கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் :)

 3. Deeba says:

  Very well written Priya, keep writing and growing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Featured Posts
 • Krishi Janani: Stepping Out Into the Great Unknown

  Krishi Janani: Ag Tech Network

  So…Appropriate IT is working on a new sustainable agriculture technology platform – Krishi Janani. We have been at it for a while now, launching a partially working prototype earlier this year. Before I go into the ‘Great Unknown’ parts of the story, a quick summary:

  Krishi Janani is an ag tech network (online platform + young women-led rural ag tech centers) enabling organic and sustainable

 • Pay It Forward: A Training in Namakkal

  Namakkal Training 6

  A three day technology training in building websites with WordPress at PGP college in Namakkal, Tamil Nadu

  By Alexandra de Vogel, Assistant Trainer

  With a background in Industrial design and innovation management, being part of this training was a first experience for me. But now I know that it will definitely not be my last experience in this field. These three days in Namakkal

 • Learning is a Mindset

  AIDA Inauguration 5

  (Guest blog by Heather A. Moore)

  Usha recently invited me to share some words of advice with the inspiring young women that had recently graduated from the pilot program of AIDA, Appropriate IT’s Development Academy, and with those from the community. Having gathered some sage advice from a few wise and generous mentors throughout my career, as well as the hard earned wisdom that comes

Archive