(Guest blog by Priya Devi Kuzhali)
இளநிலை இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்த சமயம், மாணவிகளுக்கான இலவச பயிலரங்கத்தில் எனது பெயரையும் பதிவு செய்திருந்தார் என் துணைத்தலைவர்.
அந்த பயிலரங்கத்தைப் பற்றி மேலோட்டமாக சில செய்திகள் சேகரித்து, விடுமுறை தினத்தில் கூட கல்லூரி வர வேண்டி உள்ளதே என்ற சின்ன சலிப்போடு, கல்லூரியில் காத்துக்கொண்டிருந்தேன், அந்த பயிலரங்கை நட்த்தவிருந்த பெண்மணிக்காக.
என்னைப் போலவே கிட்ட்தட்ட இருபது மாணவிகள் (சிலர் வேறு கல்லூரிகளில் இருந்து) வந்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்மணி வந்தார். தன்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு, எங்களை அறிமுகம் …